பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 300%
உயர்ந்திருப்பது தொடர்பான செய்திகள் இணையதளங்களில் திடீரென
நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா
தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து அமித்ஷா போட்டியிடுகிறார்.
இத்தேர்தலுக்காக அமித்ஷா வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
300% உயர்வு
அமித்ஷா தாக்கல்
செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள அவரது சொத்து மதிப்புகள் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு
கிடுகிடுவென உயர்ந்து 300% அதிகரித்துள்ளது.
திடீர் நீக்கம்
இச்செய்தியை
ஆங்கில இணையதளங்கள் செய்திகளாக வெளியிட்டிருந்தன. ஆனால் திடீரென இந்த
செய்தி மட்டும் அந்த இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கூகுள் சர்ச்
அதேநேரத்தில்
கூகுள் சர்ச்சில் நீக்கப்பட்ட செய்திகளின் லிங்குகள் இப்போதும்
இருக்கின்றன. அமித்ஷாவின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பது
தொடர்பாக பெரும்பாலான வட இந்திய ஊடகங்கள் மவுனம் காத்தே வருகின்றன.
மவுனம் ஏன்?
தமிழகத்தைச்
சேர்ந்த அரசியல்வாதிகளின் சொத்து மதிப்புகள் இப்படி
விஸ்வரூபமெடுத்திருந்தால் வட இந்திய ஊடகங்கள் கிழித்து
தொங்கவிட்டிருக்கும். அமித்ஷா விவகாரத்தில் மட்டும் எந்த ஒரு ஊடகமும் வாயே
திறக்காமல் இருப்பதுதான் பத்திரிகை தர்மமா? என்பது பொதுமக்களின் கேள்வி.

No comments:
Post a Comment