தமிழகத்தில் ஆக 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பாஜக தேசியத் தலைவர்
அமித்ஷா முகாமிடுகிறார். இந்த பயணத்தின் போது அதிமுக ஓபிஎஸ் அணி பாஜகவில்
இணையக் கூடும் என கூறப்படுகிறது.
பீகார்,
குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகளை உடைத்து விளையாடி வருகிறது பாஜக. புதுவையிலும் காங்கிரஸ்
ஆட்சியை வீழ்த்தும் வியூகங்களுடன் முனைப்பில் இறங்கியுள்ளது அக்கட்சி.
அதிமுக கோஷ்டிகள்
தமிழகத்தில்
ஏற்கனவே அதிமுகவின் எடப்பாடி, ஓபிஎஸ் கோஷ்டிகள் பாஜக கட்டுப்பாட்டில்
இருக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக ஓபிஎஸ் அணியை அப்படியே பாஜகவில்
இணைப்பதற்கான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முகாம்
இந்த
அஜெண்டாவை அரங்கேற்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் 22-ந் தேதி
முதல் 26-ந் தேதி வரை தமிழகத்தில் முகாமிடுகிறார். இந்த பயணத்தின் போது
தமிழக பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் அணி
அத்துடன்
ஓபிஎஸ் அணியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அதை அப்படியே பாஜகவுடன்
இணைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற சாத்தியம் இருக்கிறதாம். அப்படி ஓபிஎஸ்
அணியில் பாஜகவுடன் இணைய எதிர்ப்பு இருந்தால் பிளான் பியை அரங்கேற்றுவதற்கான
வேலைகள் முடுக்கிவிடப்படுமாம்.

No comments:
Post a Comment