வருகை தந்த சிறப்பித்த அனைவருக்கும் நன்றி . நன்றி . நன்றி...
அமீரக TIYA வின் சார்பில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும்
நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம் அதுபோல் இந்த வருடம் Jun 09-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துபாய் ஹம்ரியா லேடீஸ் பார்க் 5ஆம் வருட இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மஹல்லாவாசிகள் மற்றும் பிற முஹல்லா சகோதரர்களும் திரளாக
கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக ஏற்ப்பாடு
செய்திருந்த நோன்பு கஞ்சி, பேரித்தம் பழம், சமூசா, ரோஸ்மில்க், பிரியாணி. பழ வகைகள் மினரல் வாட்டர் ஆகியவை வழங்கப்பட்டது.
1.
நோன்பு கஞ்சி, பிரியாணி இரண்டும் (ஆயா) முகைதீன் காக்கா அவர்களின் கைவண்ணத்தில் மிக அருமையான முறையில் சமைத்து வழங்கப்பட்டது.
2.
ரோஸ்மில்க் (பக்கடா) அன்சாரி அவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கி வழங்கப்பட்டது.
3. தனது வில்லாவில்
சமையல் செய்வதற்க்கு அனுமதி வழங்கிய சகோதரர் நெய்னா முகமது
இந்நிகழ்ச்சிக்கு நோன்பு வைத்து கொண்டு காலை முதல் உறுதுணையாக நின்று கடுமையான
முறையில் வேலை செய்த நமது முஹல்லா இளைஞர்கள், மற்றும் TIYA நிர்வாகிகள் அனைவருக்கும் நமது TIYA நிர்வாகம் சார்பாக மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த நமது முஹல்லா வாசிகள் மற்றும் அனைத்து முஹல்லா பிரமுகர்கள் அனைவரையும் TIYA நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
இந்த
நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த நமது முஹல்லா சகோதரர் அனைவரையும் அமீரக TIYAவின் சார்பாக நன்றியை தெரிவித்து மேலும்
ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் தலைவர் K.M.N. முகமது மாலிக் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி
தெரிவித்தார்.
என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment