சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த மே 8 ஆம் தேதி தீ விபத்து நிகழ்ந்தில் 4 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ அங்கிருந்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 20 இருசக்கர வாகனங்கள் கருகின. இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் கட்டடிடத்தின் உரிமையாளர் விஜயகுமாரை வடபழனி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். விஜயகுமார் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment