.
லண்டன் நகரின் மையப்பகுதியில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 7
பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தலும்
ஆபத்தும் நிறைந்த சில நாடுகளுக்கு அமெரிக்கர்கள் தேவையில்லாமல் செல்வதை தடை
செய்வதற்கு தேவையான சட்டம் ஒன்றை இயற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீர்மானித்துள்ளர்.
இதுதொடர்பான முடிவை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே
தெரிவித்துள்ளார். " அரசியல் ரீதியாக இது சரியான அணுகுமுறையாக இருக்காது.
எனினும் நமது மக்களின் நலன் கருதி இந்த முடிவை நாம் எடுக்க வேண்டி உள்ளது"
என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆபத்து நிறைந்த நாடுகள் எவை? என்பது தொடர்பான எந்த விளக்கத்தையும்
அவர் நேரடியாக டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிடவில்லை.
.
.
No comments:
Post a Comment