நெல்லைமாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் 33வார்டுகள் உள்ளன.இந்த
பகுதிகளில் சுகாதாரம்,குடிநீர் உள்ளிட்ட ஏராளமான அடிப்படை வசதிகள்
நிறைவேற்றபடாமல் உள்ளதால் பல்வேறுபகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவி
வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி நகராட்சியைப் பொதுமக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிடும்போராட்டமும் நடந்துவருகிறது.
இந்நிலையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வண்ணம் அதிமுக
(டி.டி.வி.அணியை சார்ந்த தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
செல்வமோகன்தாஸ் பாண்டியன் தென்காசி நகராட்சி பகுதிமக்களின் கோரிக்கை
மனுக்களை தென்காசி நகராட்சி அலுவலகத்தில் மனுக்களை பெற்றார்.
சுமார்
60க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.இதில் திருநங்கைகள் தங்களுக்கு
இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில்
குடிநீர் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறி கோரிக்கைக்கி மனுக்களை அளித்தனர்.
தமிழகத்தில்
அதிமுக வில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரிய அளவில்
குழப்பத்தில் உள்ள நிலையில் எதற்கும் கவலைப்பாடாமல் தென்காசி சட்டமன்ற
உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பொது மக்களிடம் மனுக்களை பெற்றது
கட்சியினரிடையே வியப்பை உண்டாக்கியுள்ளது.
No comments:
Post a Comment