இந்திய விஞ்ஞானிகளின் 15 ஆண்டுகால உழைப்பு வீண் போகவில்லை. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், ஜிசாட் 19 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட கனரக ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், ஜிசாட் 19 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், ஜிசாட் 19 செயற்கைக்கோள் சரியாக மாலை 5.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், தற்போது தான் முதன் முதலாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதிக எடைகொண்ட செயற்கைகோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்கும் விதமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட உடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று பெருமிதத்துடன் கூறினார். ஜிசாட்-19 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இஸ்ரோவின் சாதனை மைல்கற்களில் மிக முக்கியமானது.
2002ஆம் ஆண்டில் இருந்து விஞ்ஞானிகள் பாடுபட்டு செயற்கைக்கோளை ஏவி உள்ளனர். உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தயாரிப்பதில் பெருமை பெற்றுள்ளோம் சிக்கலான ராக்கெட் ஏவும் தொழில் நுட்பத்தை இஸ்ரோ செயல்படுத்தி உள்ளது. விஞ்ஞானிகள் குழுவாக சேர்ந்து சாதித்து உள்ளோம் என்றும் கிரண்குமார் தெரிவித்துள்ளார். அதிக திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை தற்போது இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இது 640 டன் எடையுள்ளது. 200 பெரிய யானைகளின் எடைக்கு சமமானது. இதில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப்பின் இந்த இன்ஜினை இஸ்ரோ உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மோடி வாழ்த்து இதற்கிடையே, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சியும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment