Latest News

எனக்கா அரசியல் நாகரிகம் இல்லை... தமிழிசைக்கு வாழ்த்து சொல்லி சர்ப்ரைசாக்கிய ஸ்டாலின்!!

 DMK working president stalin wishes Tamizhisai on her birthday
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து சொல்லியிருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்திற்கு பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார். அரசியலில் நீண்ட காலம் இருக்கும் ஒரு தலைவருக்காக எடுக்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்காதது ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் நாகரிகத்தை வெளிக்காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

மதவாத சக்திகளுக்கு கருணாநிதி வைரவிழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாது என்று திமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இதே போன்று மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற அதிமுக அரசை பயன்படுத்துவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பாஜக தமிழகத்தில் கால்பதிக்க அதிமுகவை கேடயமாக பயன்படுத்துவதாக சொன்ன குற்றச்சாட்டு என்று அன்றாடம் மத்திய அரசு மீது ஸ்டாலின் வைக்கும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வந்தார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக அரசியலில் இவர்களின் அதிரி புதிரி சண்டை அரங்கேறாத நாளே இல்லை என்றும் கூட சொல்லாம். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாராம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.