பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு 2015ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் போடப்பட்ட உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா அதிபர் வெளியேறுவதாக அறிவித்துள்ளதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப், பாரீஸ் உடன்படிக்கையை முற்றிலுமாக மாற்றி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவோம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது. குறிப்பாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் பேஸ்புக் சிஇஓ மார்க் ஜுகர்பெர்க் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபரின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து கூகுள் பாடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று பேஸ்புக் சிஇஓ மார்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிரம்பின் அறிவிப்பு சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகியவற்றை கெடுப்பதாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment