தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் ஜா கட்டர் எந்திரம் மூலம் இடிக்கப்படுகிறது. இந்த எந்திரத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.
அக்னி பிழம்பின் ஆக்ரோஷ பசிக்கு இரையானது 7 அடுக்கு மாடிகளை கொண்ட தி சென்னை சில்க்ஸ் கட்டடம். தி நகர் உஸ்மான் ரோட்டில் மேம்பாலத்துக்கு இணையாக கம்பீரமாக காட்சியளித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடம் 30 மணி நேரம் நீடித்த தீ விபத்தில் ஸ்திரத் தன்மையை இழந்து எலும்புக்கூடாய் போனது.
வெப்பத்தின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் போனதால் கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தது. இதையடுத்து ஆபத்தான இந்தக் கட்டத்தை இடிக்க அரசு முடிவு செய்தது.
தொடங்கியது இடிக்கும் பணி
இதற்கான குழு அமைக்கப்பட்டு ஆய்வு மற்றும் ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நேற்று முதல் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
துளியும் பாதிக்கக்கூடாது
7 அடுக்குகளை கொண்ட இந்தக் கட்டடம் மேலிருந்து கீழாக இடிக்கப்படுகிறது. அருகில் உள்ள கட்டடங்களுக்கு துளியும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக கட்டடம் இடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
ஜா கட்டர் கருவி
இதற்கா ஜா கட்டர் எனும் அதி நிவீன ராட்சத கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்தக் காண்ட்ராக்ட்டை எடுத்துள்ளது.
ஒரு மணிநேரத்துக்கு ரூ.20,000
கட்டடத்தை இடிக்கும் இந்த ஜா கட்டர் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு ஜா கட்டர்கள் இடிப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
ரூ.24 லட்சம்
இடிப்பு பணிகள் முடிய எப்படியும் 3 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 60 மணி நேரம் என்றால் கூட 24 லட்சம் ரூபாய் செலவாகும்.
தீயை அணைக்க ஆன செலவு
தீயை அணைக்க ஆகும் செலவு சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் இருந்துதான் பெறப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதன்படி தீயை அணைப்பதற்கு ஆன செலவை தமிழக அரசு வசூல் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடிப்பு செலவு?
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தமிழக அரசு சார்பில் கட்டடம் இடிக்கப்படும் என்றார். அப்படியானால் ஜா கட்டருக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளுமா?
No comments:
Post a Comment