Latest News

எடப்பாடியை எதிர்க்கும் "அந்த" 5 பேர்.. கலகலக்கும் இஃப்தார் விருந்து!

 முக்கிய விருந்து
டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு, இஃப்தார் விருந்தை நடத்த இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ' ஆட்சிக்கு எதிராக இருப்பது அந்த 5 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான். ஆனால், 122 எம்.எல்.ஏக்களுக்கும் மேல் நமக்கு ஆதரவு இருக்கிறது என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. நந்தம்பாக்கம், வணிக வளாகத்தில் அ.தி.மு.க சார்பில் இஃப்தார் விருந்து நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆளும்கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போகும் எம்.எல்.ஏக்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தினகரனுக்கு ஆதரவாக 34 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த எம்.எல்.ஏக்களில் பலரை எடப்பாடி அணி வளைத்துவிட்டது. இதில், அமைச்சர் பதவி உள்பட சில ஆதாயங்களை எதிர்பார்த்த எம்.எல்.ஏக்களுக்கு, எடப்பாடி எதுவும் செய்யவில்லை. அவரை வழிக்குக் கொண்டு வருவதற்காக, தினகரனை சந்தித்து ஆதரவு கொடுத்தனர் சில எம்.எல்.ஏக்கள். இதற்கெல்லாம் கொங்கு லாபி அசைந்து கொடுக்கவில்லை.

முக்கிய விருந்து இந்நிலையில், இன்று நடக்கும் இப்ஃதார் விருந்தை மிக முக்கியமானதாகப் பார்க்கிறார் எடப்பாடி என விவரித்த ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர், "திகாரில் இருந்து வந்தநாளில் இருந்தே, தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சில எம்.எல்.ஏக்கள் பேசி வந்தனர். இதன் ஒருபகுதியாக, கட்சி நடத்தும் இஃப்தார் விருந்தில் தினகரனை முன்னிறுத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை எடப்பாடி தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

தம்பி அமைதியா இருங்க அந்தத் தம்பி அமைதியாக இருக்கட்டும் என உறுதியாகக் கூறிவிட்டனர். இன்று நடக்கும் விருந்தை ஐந்து எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பார்கள் என எடப்பாடி எதிர்பார்க்கிறார். அதில், வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் அடக்கம். இவர்களைத் தவிர, எடப்பாடியை ஆதரிக்கும் அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆஜராவார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறார். பன்னீர் அணியின் ஆதரவும் இருப்பதால், தைரியமாக இருக்கிறார் எடப்பாடி. கட்சி அலுவலகத்துக்கும் வர முடியாமல், நிர்வாகிகளிடம் ஆலோசிக்க முடியாமல் தவிப்பில் இருக்கிறார் தினகரன் என்றார் விரிவாக.

பணம் தா.. ஆதரிக்கிறோம் தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏக்கள் பலரும், பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், சசிகலா குடும்ப சண்டை உச்சத்தில் இருப்பதால், ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் எதுவும் செட்டில் ஆகவில்லை. இதையடுத்து, எடப்பாடியை சந்தித்த எம்.எல்.ஏக்கள், கூவத்தூரில் வைத்து எங்களிடம் தினகரன் நன்றாகப் பழகினார். சிறை வாழ்க்கைக்குப் பிறகு, நலம் விசாரிக்கத்தான் சென்றோம். எங்களைத் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அரசுப் பணிகளில் எங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் எனப் பேசியுள்ளனர்.

வாங்கய்யா வழிக்கு தினகரனை ஆதரிக்கும் 5 எம்.எல்.ஏக்களையும் வழிக்குக் கொண்டு வரும் வேலையில் திவாகரன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். தினகரன்-திவாகரன் சண்டை உச்சத்தில் இருப்பதால், நடப்பதை அமைதியாக கவனித்து வருகிறார் எடப்பாடி என்கின்றனர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.