தன்னை கருணை கொலை செய்துவிட்டு தனது உடலை குடும்பத்தாரிடம்
ஒப்படைத்துவிடுங்கள் என்று தமிழக முதல்வருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்
எழுதியுள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த
கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ்,
ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
26 ஆண்டுகால சிறை வாழ்க்கை
இதைத்
தொடர்ந்து அவர்கள் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் கடந்த 26
ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தண்டனை காலம் முடிந்து அவர்களை
விடுதலை செய்ய கோரி பல முறை கோரியும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
ஜெயலலிதா அறிவிப்பு
விடுதலை செய்யும் என்று அப்போதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். எனினும் அவர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி நீர்த்துபோனது.
ராபர்ட் பயஸ்
முடியப்போகும் வாழ்வு
ஆனால்
மத்தியில் முன்பிருந்த அரசும், தற்போதைய அரசும் தங்கள் விடுதலையை கடுமையாக
எதிர்க்கின்றன. சிறைக்குள்ளேயே தங்கள் வாழ்வை முடித்துவிட வேண்டும் என்பது
மத்திய அரசின் முடிவு செய்துள்ளது.
பட்டதாரியான ராபர்ட் பயஸ்
சிறையில் இருந்தபடியே ராபர்ட் பயஸ், மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு, இந்திரா காந்தி திறந்தநிலைப்
பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சி, ஊட்டச்சத்து, தந்தை பெரியார்
பாலிடெக்னிக் மையத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, ஓவியம் உள்ளிட்ட
பயிற்சிகளை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment