
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை
கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மிகுந்த
எச்சரிக்கையுடன் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால்
வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் முக கவசங்கள், கையுறையுடன்
பணிபுரிகின்றனர். இந்நிலையில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில்
பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் ஒருவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல்,
உடல்வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நேற்று முன்தினம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அந்த பெண் போலீசிடமிருந்து
எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் கொரோனா ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த
ஆய்வு முடிவுகள் இன்று அல்லது நாளை தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் போலீஸ் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
No comments:
Post a Comment