ஜப்பானின் ஒசாகா நகரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில்
சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம்
என்று அஞ்சப்படுகிறது.
மக்கள் அதிகமாக நடமாடும் காலை
நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில
மணிநேரங்களுக்கு மூடப்பட்டது; ரயில் சேவைகள் தடைப்பட்டன மற்றும் தொழிற்சாலை
பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
6.1 என்ற அளவில் ஏற்பட்ட இந்த
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மேலும், இந்நகரத்திலுள்ள அணுமின் நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டு
வருகின்றன.
நிலநடுக்கம்
அதிக அளவில் ஏற்படும் நாடாக ஜப்பான் உள்ளது. உலகளவில் 6.0க்கும் என்ற
அளவிற்கும் மேலாக ஏற்படும் நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 20
சதவீதத்துக்கும் அதிகமானவை இங்கு நிகழ்கின்றன. நிலநடுக்கத்தின்போது பள்ளியிலிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும்,
வயதான ஆணொருவர் சுவர் இடிந்து விழுந்ததிலும், வீட்டிலுள்ள புத்தக
அலமாரியில் சிக்கி மற்றொருவர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய
தொலைக்காட்சியான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் பலர்,
நகரும் படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சாலைகளின் கீழே செல்லும் தண்ணீர்
குழாய்கள் உடைந்து சாலைகளில் விரிசல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment