அரசியலுக்கு வருவதற்கு ரஜினி ஆயத்தமாகிவருவது உறுதியாகிவிட்டது. ரஜினியின் நண்பர் பத்திரிகையாளர் சோ மறைந்துவிட்ட நிலையில், தற்போதுள்ள சீனியர் பத்திரிகையாளர்கள் பலருடன் ரஜினி இதுகுறித்து கருத்து கேட்டு வருகிறார். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்ட மற்றும், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், ரஜினிக்கு அரசியல் ஆசை துளிர்த்துள்ளது. திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்தபோது வாழ்த்திய ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுத்தபோது வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டிருந்தபோது, வார இதழ் ஒன்று நடத்திய விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டை முறைப்படுத்தலாமே தவிர தடை செய்ய கூடாது என்று 'வாய்ஸ்' கொடுத்தார். அப்போதே அவர் அரசியலுக்கான அச்சாரத்தை போட ஆரம்பித்திருந்தார்.

தொடர்ச்சியாக ஆலோசனை நக்கீரன் கோபால் போன்ற சில பத்திரிகையாளர்களுடன் அவர் ஆலோசனைகளை நடத்தி வந்தார். கள நிலவரங்கள் எப்படி உள்ளன என்பது பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களிடம் தொடர்ச்சியாக அவர் கருத்து கேட்டு வந்தா
விரிவடைந்த ஆலோசனை இந்த நிலையில், இப்போது தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் வட்டத்தையும் தாண்டி, பல்வேறு தொலைக்காட்சி சேனல்களின் எடிட்டர்களை தனது வீட்டுக்கே அழைத்து, தனது அரசியல் திட்டம் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
எடிட்டர்களுடன் ஆலோசனை தமிழகத்தின் மிக நீண்ட கால பாரம்பரியம் கொண்ட ஒரு நாளிதழின் ஆசிரியருடன் ரஜினி ஆலோசித்துள்ளார். இதேபோல முன்னணி செய்தி தொலைக்காட்சி சேனல்களில் எடிட்டர்களாகவும், விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்களாகவும் உள்ள இருவரையும், மற்றொரு தொலைக்காட்சி சேனலின் இணை செய்தி ஆசிரியர் ஆகியோரையும் ரஜினி சந்தித்துள்ளார்.
அரசியலுக்கு வருவது உறுதி இதேபோல சில நாட்கள் முன்பு, நக்கீரன் கோபாலுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். கள நிலவரத்தை அறிவதோடு மட்டுமின்றி, ஊடகங்கள் மக்களிடம் பொதுக் கருத்தை உருக்குபவை என்பதும் எடிட்டர்களுடனான இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம். எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.
அரசியல் விஐபிகள் அடுத்ததாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர், ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட அரசியல் விஐபிகளை சந்தித்து, புதுக்கட்சியை துவக்குவதற்கான ஆலோசனை பெறுவதற்கு ரஜினி ஆயத்தமாகி வருகிறாராம். பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால், தனிக்கட்சி தொடங்குவதே சரியானதாக இருக்கும் என அறிவுரை கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment