நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தை தற்போது தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். . தொடர்பாக குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,'' சரியான முதலீட்டாளரை எதிர்பார்த்து உள்ளோம். அப்படி ஒரு நபர் கிடைத்தால், ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து மத்திய அரசு உடனே வெளியேறும்,'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " விமான போக்குவரத்து சந்தையில், 84% தனியார் நிறுவனங்களால் கையாளப்படுகிறது. எனவே, 100% தனியாரிடமும் செல்வதில் எந்த தவறும் இல்லை. விமான போக்குவரத்தில் ஏர் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் குறைவுதான். ஆனால், அந்த நிறுவனத்தின் கடன் சுமை 2016ம் ஆண்டு டிசம்பர் வரை , 50 ஆயிரம் கோடி ரூபாய். உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை, 14.1% என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. இதில், இண்டிகோ நிறுவனம் பங்களிப்பு, 39.8% ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்களிப்பு, 15.5% மட்டுமே. " என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment