தி.நகர் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பல மணி நேரமாக எரிந்துவரும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தீவிபத்து இடத்தைப் பார்வையிட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சென்னை சில்க்ஸ் தீவிபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. கடையின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை." என்று கூறினார்.
மேலும் அவர் "நானும் தொகுதி எம்பி ஜெயவர்தனும் இங்கேயே இருந்து, முழுமையாக மீட்பு பணி முடிந்த பிறகே செல்வோம். தீ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தீயணைப்புத்துறை முழுமையாக தீ அணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது." என்று கூறினார்.
இதனிடையே சென்னை சில்க்ஸ் கடையின் முதல் தளத்தின் பின்பக்க சுவரை போலீசார் இடித்து தள்ளினர். மேலும் கடையில் உள்ள கேன்டீன் பகுதியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து உட்பகுதியில் சிதறுகின்றன.
10 மணிநேரமாக தீ எரிவதால் தி.நகர் முழுக்க புகை சூழ்ந்துள்ளது. இதனால் தி. நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment