சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். போலீசார் எச்சரித்தும் மக்கள் செல்லாததால் வஜ்ரா வாகம் மூலம் கூட்டதை கலைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் குழுமத்துக்கு சொந்தமான குமரன் தங்க மாளிகையில் இன்று அதிகடிர பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தவித்து வருகின்றனர். இந்த விபத்துக் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காணப்படுகிறது.
போராடும் வீரர்கள் ஸ்கை லிப்ட் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. கடையின் சுவர்கள் இடிக்கப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
உயிரிழப்பு இல்லை விபத்துக் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
வேடிக்கை பார்க்க கூடும் கூட்டம் இந்நிலையில் இந்த தீ விபத்தை நேரில் காண ஏராளமான மக்கள் திருவிழா பார்ப்பது போல் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் பல முறை எச்சரித்தும் மக்கள் தொடர்ந்து அத்துமீறிகின்றனர்.
வஜ்ரா வாகனம் மூலம் துரத்தல் இதையடுத்து வஜ்ரா வாகனம் மூலம் போலீசார் கூட்டத்தை கலைத்து வருகின்றனர். சூழ்நிலையை புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
புயல்லேயே செல்பி எடுப்போம் புயல், மழை, சாலை விபத்துகள், சாலையில் ஏற்படும் பள்ளம் என எதையும் விட்டு வைக்காமல் செல்பி எடுக்கும் நம் மக்கள் இப்படி ஒரு தீ விபத்தை மட்டும் விட்டுவார்களா என்ன? விபத்தை ரசித்து வேடிக்கை பார்த்து செல்பி எடுத்து தங்களின் சமூக வலைதள பக்கங்களில் விடாமல் இருக்க முடியுமா அவர்களால்?

No comments:
Post a Comment