இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
மாடுகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனேர் என்று கூறப்படுகிறது. மேலும் தனி மனி உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவசர மனு மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்பு கொண்டதையடுத்து, மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
உரிமையில் தலையீடு அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மத்திய அரசு தனி மனிதனின் அடிப்படை உணவு உரிமையில் தலையிடுவதாக வாதிட்டது. எனவே இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
அவகாசம் தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் சுவாமிநாதன் மனு அவசர மனுவாக விசாரணைக்கு ஏற்கப்பட்டதால் இது குறித்து விளக்கமளிக்க அவகாசம் தேவை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2017 மிருகவதைத் தடுப்பு சட்டம் மாநில அரசுக்க்ம பொருந்துமாக என்பதை விளக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இடைக்காலத் தடை மேலும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும் இந்த 4 வார காலத்திற்கு இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டமாக ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் கடைசி வரை பாதிப்பில்லை தமிழகம் முழுவதும் மாட்டிறைச்சி தடையை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவால் ஜூன் மாத இறுதி வரை இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய கொண்டு செல்வதற்கான தடை இடைக்காலமாக நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment