Latest News

அரசுமுறை பயணத்திற்கு நடுவே நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்த மோடி! சர்ச்சையாகும் வைரல் படம்

Modi and actress Priyanka Chopra meeting picture going viral
நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி, ஜெர்மனியில் அரசு முறை சுற்றுப் பயணமாக சென்றபோதிலும், அங்கு நடிகை பிரியங்கா சோப்ராவுடன் சந்தித்து பேசியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 

ஆனால் ஜெர்மனியில் இன்று பிரியங்கா சோப்ராவுடன் பிரதமர் சந்தித்து பேசியுள்ளார். இதை மகிழ்ச்சியோடு பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். யதேர்ச்சையாக சந்திக்க நேரம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் வரை நடத்திப் பார்த்தும் மோடி அவர்களை சந்திக்கவில்லை. ஆனால் அரசுமுறை பயணத்தின்போது யதேர்ச்சையாக நடிகை பிரியங்கா சோப்ராவுடன் மட்டும் சந்திப்பு நடத்த அவருக்கு நேரம் கிடைத்துள்ளதே என ஆச்சரியப்படுகிறார்கள் மக்கள். நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மோடி இவ்வாறு அதைபப்பற்றி கருத்து கூறாமல் நடிகையோடு உரையாடிக்கொண்டிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபக்க விமர்சனம் என்றால், பிரதமர் முன்னிலையில், கால் மேல் கால்போட்டு ஒரு பிரஜை அமர்வதா என்ற வாதமும் எழுந்துள்ளது. நடிகை காஜோல் டெல்லியில் பிரதமரை முன்பு ஒருமுறை சந்தித்தபோது இப்படி கால் மேல் கால்போட்டுதான் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.