தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.
மருந்து வணிகத்தை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கடை அடைப்பிற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன், மருந்து வணிகத்தை அந்நிய மருந்து நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் முயற்சியாக ஆன் லைன் மருந்து வணிகத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இதேபோல், மத்திய அரசின் மருந்து கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

No comments:
Post a Comment