Latest News

ஐஐடியில் மாணவர் தாக்குதல்... மாணவர் சங்கங்கள் போராட்டம்... பதற்றத்தில் ஐஐடி வளாகம்!: வீடியோ

  Students who agitated against Suraj's attack arrested in Chennnai IIT.
சென்னை ஐஐடியில் மணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர். சென்னை ஐஐடியில் பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சூரஜ், மாட்டிறைச்சி தடைக்கான எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். இதனால் கோபமடைந்த எதிர்தரப்பைச் சேர்ந்த பாஜகவின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்ரகள் சூரஜை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில் அவருடைய கண் கடும் பாதிப்படைந்துள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக சங்கம் உள்ளிட்ட பல மாணவ அமைப்புகள், ஐஐடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஐஐடி வளாகத்தில் படிக்கும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஐஐடி சென்னை டீன், பேச்சு வார்த்தை நடத்தி, சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்தைச் சேர்ந்த மாணவ்ர்கள் மீது, மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஜெ.என்.யூ, ஹைதராபாத் யுனிவர்சிட்டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்ற மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதல் பலி, ஹைதராபாத் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ரோஹித் வெமுலா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.