திருமுருகன் காந்தியுடன் சேர்ந்து சிறைவாசம் அனுபவிக்கும் டைசன், இளமாறன் இருவரும் தமிழர் விடியல் கட்சியை சேர்ந்தவர்கள். மற்றொருவரான அருண்குமார் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர். சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும். மெரினா கடற்கரையில் மாலைநேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவு அஞ்சலி செலுத்துவர். ஆனால் இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி தமிழ் உணர்வாளர்கள் பலரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருமுருகன் காந்தி கைது இவர்களில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரை தமிழக அரசு கைது செய்து சிறையிலடைத்தது. இந்நிலையில் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் மீது அடுத்தடுத்து பல வழக்குகளைப் போட்டது தமிழக அரசு.
குண்டர் சட்டம் இதன் உச்சமாக திருமுருகன் காந்தி மீது குண்டர்சட்டமும் பாய்ந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முத்துக்குமார் தீக்குளிப்பு திருமுருகன் காந்தியின் தந்தை தொழிற்சங்கவாதி. முத்துக்குமார் தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் களத்துக்கு வந்தவர்.
நாம் தமிழரில் இருந்து விலகி அதேபோல் டைசன், இளமாறன் இருவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்தனர். ஆனால் நாம் தமிழர்கட்சியின் பெரியார் எதிர்ப்பு பிரசாரத்தால் வெளியேறி தமிழர் விடியல் கட்சியைத் தொடங்கினர்.
காஞ்சி மக்கள் மன்ற அருண் இவர்களைப் போல அருண்குமார் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி காஞ்சி மக்கள் மன்றத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் விடுதலைக்காக தீக்குளித்து மாண்ட செங்கொடி, காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment