Latest News

தந்தையின் நோயை சுகமாக்குவதாக கூறி தாயையும், என்னையும் பலாத்காரம் செய்த சாமியார்.. கேரள மாணவி கதறல்

 தந்தை உடல்நிலை
தொடர்ந்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பக்கவாதம் தாக்கிய தனது தந்தையை குணப்படுத்துவதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து தன்னையும், தனது தாயையும் சாமியார் சீரழித்துவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். இவரது ஆணுறுப்பை 23 வயதாகும் சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்துவிட்டார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்த முடியாது கணேஷனந்தாவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90 சதவீதம் அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஆணுறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.

கள்ளக்காதல் கணேஷனந்தாவுக்கும் ஒரு பெண்மணிக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே கள்ள உறவு இருந்துள்ளது. இந்த நிலையில், அவ்வப்போது பெண்மணியின் வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் மகளையும் பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார். அந்த மகள்தான் இப்போது கோபத்தில் கணேஷனந்தா ஆணுறுப்பை வெட்டிவிட்டார்.

தந்தை உடல்நிலை போலீசாரிடம் மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், தான் 12ம் வகுப்பு படிக்கும்போது தனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும், பில்லி, சூனியம் போன்றவற்றால் அவருக்கு இப்படி ஆனதாக நம்பி தனது தாயார் கணேஷனந்தாவை வீட்டுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார்.

கள்ள உறவு தனது தந்தை பக்கவாதத்தில் இருந்ததால், தனது தாய், கணேஷனந்தாவுடன் கள்ள உறவு கொண்டதாகவும், அதன்பிறகு தன்னையும் சாமியார் பலாத்காரம் செய்ய தொடங்கியதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார் அந்த மாணவி.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.