Latest News

ஆப்கன் மீது பேரழிவு குண்டுகளை வீசி அமெரிக்க படைகள் பயங்கர தாக்குதல்

 US drops largest non nuclear bomb in Afghanistan
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள அணுகுண்டுகள் அல்லாத சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் என்ற இடத்தில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து 21,000 பவுண்ட் எடையுள்ள பேரழிவு வெடிகுண்டுகளை அமெரிக்கா வீசியுள்ளது.

இதுவரை அல்லாத அளவில் இது மிகப்பெரிய குண்டுவீச்சாக பார்க்கப்படுகிறது. MOAB 'மதர் ஆப் ஆல் பாம்' என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. சுமார் 300 மீட்டர் அளவிற்கு இதன் பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடந்த இடத்தில்தான் ஐஎஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து தங்கி, மேற்கத்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.