நீட்' தேர்விற்கு தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எப்படி தயாராவது என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் நீட் தேர்விற்கு ஆங்கிலத்திலும ஹிந்தியிலும்தான் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில் புத்தகங்கள் இல்லை என்பதால் தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். தமிழ் மீடியம் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்கள் தமிழில் பயிற்சி புத்தகங்கள் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க.
நீட் தேர்வு
பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்
மற்றும் பி.டி.எஸ்., படிப்பில், இதுவரை கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்பட்டு
வந்தனர்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு,
மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் நீட்
தேர்வு அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில்
மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மே மாதம் தேர்வு
நாடு முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு தமிழ்
தெலுங்கு உட்பட 10 மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு கோரி, தமிழக
சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்
பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
மாணவர்கள் தவிப்பு
இதனால் தமிழக மாணவர்களும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில்
சேருவதற்கு கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலான நீட் தேர்வு
புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்தான் உள்ளது. நீட் தேர்வை இந்த
வருடத்தில் இருந்து தமிழில் எழுதலாம். அதற்கு தமிழ் மீடியம் மாணவ
மாணவியர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் தயாராக உள்ளனர். ஆனால்
தமிழ் புத்தகங்கள் நீட் தேர்விற்கு இன்னும் அச்சிடப்படவில்லை என்பதால்
மாணவர்கள் எப்படி தயாராவது என முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழில் புத்தகங்கள் தேவை
நீட் தேர்வு தமிழில் எழுதலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழ்
வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தமிழில் புத்தகங்களை அச்சிட்டு தமிழக
அரசே அதனை வெளியிட்டால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏப்ரல்
மாதம் தொடங்கி பாதி மாதம் முடியப் போகிறது. ஆனால் தமிழ் வழி பயிற்சி
வகுப்புக்களோ, புத்தகங்களோ இன்னும் எதுவும் வரவில்லை. அரசுப் பள்ளி மற்றும்
தமிழ் மொழியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உதவும் வகையில் அரசு
தமிழிலேயே பயிற்சி வகுப்புக்கள் மற்றும் புத்தகங்களை வெளியிட முன் வர
வேண்டும்.
எட்டாக் கனி
பிற மொழிகளில் உள்ள புத்தகங்களை தமிழில் மொழிப்பெயர்த்து புத்தகம் வெளியிட
வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ
கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களே அதிகம் இருப்பார்கள். தமிழ் மாணவர்கள்
மற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மருத்துவப்
படிப்பு என்பது கைக்கு எட்டாக் கனியாவேதான் இருக்கும்.
No comments:
Post a Comment