ஒரு தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் பழுதடைந்து 100 அடி
உயரத்தில் நின்றது. அதில் பயணித்தவர்கள் அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு
ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே லார்கோவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் ரோலர்
கோஸ்டரில் சிலர் பயணம் செய்தனர். 24 பேருடன் சென்ற 6 பெட்டிகள் 100 அடி
உயரத்தில் சென்றபோது திடீரென பழுதாகியது. இதையடுத்து தீம் பார்க் ஊழியர்கள்
ரோலர் கோஸ்டரை மீண்டும் இயக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எதுவும்
முடியவில்லை.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு படையினர் ராட்சத
ஏணியை பயன்படுத்தி சுமார் 4 மணி நேரம் போராடி அந்த 24 பேரையும் பத்திரமாக
மீட்டனர்.
ரோலர் கோஸ்டர் பழுதானால் 100 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த 24
பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அந்தரத்தில் ஊசலாடிய உயிரை
தீயணைப்பு வீரர்கள்தான் மீட்டுக்கொடுத்தனர்.
No comments:
Post a Comment