வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் காங்கிரஸ் கட்சி 28 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா 21 இடங்களில் வெற்றி பெற்று 2–ம் இடத்தை பெற்றது. நாகா மக்கள் முன்னணி 4 தொகுதிகளையும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றின. லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா 1 இடங்களில் வெற்றி பெற்றன. மணிப்பூரில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்பதால் அங்கு புதிய அரசு அமைவதில் இழுபறி நிலை உருவாகியது.
இந்நிலையில் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக தயாராக உள்ளது. பாஜகவுக்கு தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:
Post a Comment