ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில்
பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், கோவாவில் ஆட்சியை பறிகொடுத்தது.
முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் மட்டுமின்றி அவர் தலைமையிலான
அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கிய அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர்.
40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் 2012-ல் நடந்த தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. இந்தமுறை 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க விற்கு பிற கட்சிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.
அதனை தொடர்ந்து கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கோவாவில் பாஜகவுக்கு மஹாராஷ்ட்வதி கோமண்டக், கோவா பார்வார்டு கட்சிகள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவுடன் மனோகர் பாரிக்கர் சந்தித்தார். அப்போது 22 ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். மனோகர் பாரிக்கர்,நிதின் கட்கரி உடனிருந்தார்.
உத்தரபிரதேசம்,உத்தரகாண்ட் தொடர்ந்து கோவாவிலும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய நிதி மந்திரி நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து இதுவரை விலகவில்லை. மனோகர் பாரிக்கர் கோவாவின் முதல்-அமைச்சராக ஆக வேண்டும் என்பதே கோவா பாஜக எம்.எல்.ஏக்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment