Latest News

போராட்டத்தை திசை திருப்ப முயற்சி- வாபஸ் இல்லை.. நாளை உண்ணாவிரதம்.. மீனவர்கள் திட்டவட்டம்!!

 
தங்கச்சிமிடத்தில் போராட்டம் முடிவு பெறவில்லை என மீனவர்கள் சங்கத் தலைவர் எமரால்டு தெரிவித்துள்ளார். நாளை அறிவித்தப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயதான மீனவர் சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தமிழக அரசியல் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக இன்று தகவல் வெளியானது. இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய மீனவர்கள் சங்கத் தலைவர் எமரால்டு போராட்டம் இன்னும் முடிவு பெறவில்லை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார். அறவழியில் அமைதியாகப் போராட்டம் நடைபெறுவதாக அவர் கூறினார். போராட்டத்தை திசைத்திருப்ப முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர் நாளை அறிவித்தப்படி உண்ணாவிரதம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.