இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நடுவேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் புனே
மைதானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஆட்டம் தடைபட்டு பரபரப்பு
நிலவியது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நடுவேயான முதலாவது டெஸ்ட்
போட்டி புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று
வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான்.
இந்நிலையில், இந்தியா இன்று தனது முதல் இன்னிங்சில் 22வது ஓவரில் 3
விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்திருந்தபோது, பவுண்டரி எல்லையிலுள்ள
எலக்ட்ரிக் விளம்பர போர்டில் திடீரென புகைமூட்டம் எழுந்தது. தீ விபத்து
ஏற்பட்டதை உணர்ந்த மைதான நிர்வாகிகள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல்
கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு
பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. தீ அணைக்கப்பட்ட பிறகு
மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment