Latest News

இன்னோவாவுக்கு பதிலா ஃபார்ச்சூனருக்கு ஆசைப்பட்டுள்ளாருப்பா.. வலைத்தளத்தில் வறுபடும் நாஞ்சில் சம்பத்


அதிமுகவிலிருந்து விலகப்போவதாக கூறியவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா தனக்கு கொடுத்த இன்னோவா காரையும் திருப்பி கொடுத்தார். வான் கோழி மயிலாக முடியுமா, சசிகலாவுக்கு தகுதியுள்ளதா என நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் பேட்டியளித்ததன் மூலம் சசிகலா எதிர்ப்பாளர்களை குஷிப்படுத்தினார் நாஞ்சில் சம்பத். அடேங்கப்பா.. ஜெயலலிதா மீது பாசம் வைத்த நாஞ்சில் சம்பத்தை தப்பாக நினைத்துவிட்டோமே என எதிர்க்கட்சிக்காரர்கள் கூட வருத்தப்பட்டனர். எப்பேர்பட்ட மானஸ்தன் என்றெல்லாம் புகழுரைத்தனர். இந்த நிலையில் இன்று சசிகலாவை நாஞ்சில் சம்பத் நேரில் சந்தித்து அதிமுகவில் தொடரப்போவதாக அறிவித்ததோடு, சசிகலாவுக்கு கட்சியை தலைமை தாங்கும் தகுதி இருக்கிறது என்றும் பேட்டியளித்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் நாஞ்சில் சம்பத் குறித்து கேலியும், கிண்டலும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை

வண்டி சர்வீஸ் சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! அதிமுகவில் தொடர்வேன் என பேட்டி... வண்டி வாட்டர் சர்வீஸ் போயிட்டு வந்துருச்சு போல!
சர்வீஸ் விட்டுருக்காருப்பா சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் சந்திப்பு-அதிமுகவுக்காக சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிப்பு.. இன்னோவாவை சர்வீஸ் விடுறதுக்குதான் இவ்வளவு பில்டப்பா

குடைபிடிச்சிட்டு போற பெரியவரே! அதிமுகவிலேயே தொடருவேன்- நாஞ்சில் சம்பத்.. அவசரப்பட்டு இவர கும்பிட்டுட்டோமே.. இரு வீட்டுக்கு போனதும் கைய அடுப்புல வச்சி கருக்கிடனும்

ஹய்யோ, ஹய்யோ.. அதிமுக வில் தொடர்ந்து பணியாற்றுவேன்- நாஞ்சில் சம்பத்.. "நான் இன்னோவ கார திரும்ப குடுத்ததும் என்ன நீங்க மானஸ்தனு நம்பிட்டிங்க ஹய்யோ! ஜய்யோ!!

புதுக்கார் கொடுப்பாங்களோ அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன்.-நாஞ்சில்சம்பத், TOYOTO FORTUNER -க்கு தானே ஆசைப்பட்டுள்ளீர்

சந்துரு, சந்துருன்னு மானஸ்தன் இங்க நாஞ்சில் சம்பத் நாஞ்சில் சம்பத்துனு ஒரு மானஸ்தர் இருந்தாரே.. யாராவது பார்த்தீங்க..!!

முன்னாடி இப்படி சொன்னாரே சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்: நாஞ்சில் சம்பத் .. அதே மானஸ்த்தன் தான்...!!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.