எங்களோட லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க. 2017ல்
மாவட்ட வாரியாக சென்று கட்சியை பலப்படுத்துவோம் என்றும் டி. ராஜேந்தர்
தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கரடிக்கல் கிராம மக்கள் இன்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி
போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து
கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரம் விளைஞ்ச மண்ணு மதுரை,
இந்த மதுரையில பெயர் போனது ஜல்லிக்கட்டு, அந்த ஜல்லிக்கட்டை தடை செய்வதா
என்று கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு தகுந்த வழிமுறையை
பின்பற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தடைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். எங்களோட
லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க. 2017ல் மாவட்ட வாரியாக
சென்று கட்சியை பலப்படுத்துவோம் என்றும் டி. ராஜேந்தர் கூறினார்.
No comments:
Post a Comment