தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்றும் போராட்டத்தை
தொடர்ந்தனர். அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நடத்தியதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்காரர்கள்
தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் இன்று சரமாரி தடியடி நடத்தினர்.
இதையடுத்து பல இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மட்டும் மாணவர்கள், இளைஞர்கள்
மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம்
போலீஸ் உயர் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து
போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக
தமுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து போகுமாறு
போலீசார் எச்சரித்தனர். அவர்களிடம் சட்டவிரோதமான ஆயுதங்கள் இருப்பதாகவும்
போலீசார் புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment