பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி
கூறிய கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய
மாபெரும் போராட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து டுவிட்டர் மூலம்
குரல் கொடுத்து வந்தார். போராட்டத்திற்கும் தனது ஆதரவை
தெரிவித்திருந்தார். போராட்டம் நடைபெற்ற போது பொதுமக்களை முதல்வர் நேரில்
சந்தித்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கமலின் இந்த
கருத்து முட்டாள்தனமானது என சுப்பிரமணியன்சுவாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு கமல் தனது டுவிட்டரில், 'ஹாய் சாமி. நான் தமிழ்
வாலா. முதல்வர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். காந்தியும், ஜூலியஸ்
சீஸரும் கூட மக்களிடம் பணிவாகதான் இருந்தார்கள். அப்படியிருக்கையில்
முதல்வர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?' என அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
மற்றொரு டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இனி பதில் சொல்ல
விருப்பமில்லை எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment