மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக
நியமனம் செய்யப்பட்டுள்ளார் சசிகலா. அதிமுக தொண்டர்களில் சிலர் இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சசிகலாவின் தலைமையை பிடிக்காத சில தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள்
தீபாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.
அம்மாவின் குல விளக்கே.. ஆளப் பிறந்தவளே.. தமிழகத்தின் இதய துடிப்பே..
என்றும் சின்னத்தாயே என்றும் அழைக்கின்றனர். தென்மாவட்டங்களில் இருந்தும்
ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்து தீபாவிற்கு வீடு முன்பாக குவிந்து
வருகின்றனர். அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவே அதிமுகவை வழிநடத்தவேண்டும் என்றும்
தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவாகவும், சசிக்கு எதிராகவும் போஸ்டர்கள்
ஒட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில், திருநரையூர்
பகுதிகளில் தீபாவுக்கு ஆதரவான பேனர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அங்குள்ள பிலக்ஸ் பேனர்ளில் "தொண்டர்கள் இருப்பது உங்கள் பக்கம்,
துரோகியிடம் இருப்பது அடிமை வர்க்கம்" என தலைப்பிட்டு வைத்துள்ளனர். இந்த
பேனர்கள் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.
No comments:
Post a Comment