சென்னை மெரினாவில் அமைதியாக நடந்து வந்த போராட்டம் தற்போது கலவரமாக
மாறியுள்ளது. இன்று அதிகாலை மெரினாவில் குவிந்தவர்களை கலைந்து செல்லுமாறு
போலீசார் வற்புறுத்தினர். ஆனால், அவர்கள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை.
கடல் தண்ணீர் அருகே சென்று நின்று கொண்டு, வற்புறுத்தினால், தண்ணீரில்
குதிப்போம் என்று கூறினர்.
மெரீனாவில் இருந்து ஒரு பிரிவினர்
வெளியேறினாலும் ஏராளமானோர் கடலுக்கு அருகில் அமர்ந்து போராட்டம் நடத்தி
வருகின்றனர். அவசர சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்த பின்னரே
நாங்கள் வெளியேறுவோம் என்று கூறிவருகின்றனர்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் மெரினாவில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழக
அரசு பிறப்பித்த அவசர சட்டம் குறித்து விளக்கம் அளித்த ஹரி பரந்தாமன்
காவல்துறையினருடன் போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்
மெரினா வருகை தந்தார். அவர் மிருகவதை தடுப்புச் சட்டம் குறித்தும்,
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும் விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து
சட்ட வல்லுநர்களும் மெரீனா கடற்கரையில் அமர்ந்து போராட்டம்
நடத்தியவர்களுக்கு அவசர சட்டத்தில் உள்ளது பற்றி விளக்கம் அளித்தனர். மிருக
வதை பற்றி விளக்கம் தெரிவித்தனர்.
அவசர சட்டத்தில் என்ன இருக்கிறது
என்பதை நீதியரசர் ஹரிபரந்தாமல் விளக்கியதை கேட்க கூட பொறுமையின்றி
மாணவர்கள் தவிர்த்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது
ஜல்லிக்கட்டுக்காக விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம்
செய்யப்பட்டுள்ளது என்றும் ஹரிபரந்தாமன் கூறினார்.
No comments:
Post a Comment