சென்னையில் இன்று காலை முதல் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து
பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என
எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர்
மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த
சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றை ஸ்டாலின் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்
ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம்
வலியுறுத்தினேன். மேலும், சென்னையில் இன்று காலை முதல் நடந்த அசம்பாவித
சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை தேவை என ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன்.
மேலும் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்
அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரினோம் என்றார்.
No comments:
Post a Comment