வாக்காளர் சிறப்பு திருத்தத்தை அடுத்து தமிழகத்தில் 5.92 கோடி
வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர்
பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2017-ன்
இறுதிப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை
தொடர்ந்து தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி, பெண் வாக்காளர்கள் 2.99 கோடி, மூன்றாம்
பாலின வாக்காளர்கள் 5,040 பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறப்பு திருத்தத்தைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் நாளை
வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் குறைந்த பட்சமாக, கீழவேளூர் தொகுதியில் 1.22 லட்சம் வாக்காளர்கள்
உள்ளனர்.
No comments:
Post a Comment