புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் இந்தியாவில்
தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் தங்கள் நாட்டு 0 பயணிகள் எச்சரிக்கையுடன்
இருக்குமாறு இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவில் வடமேற்கு
பகுதிகளான கொச்சி, மும்பை, கோவா, புனே போன்ற இடங்களில் புத்தாண்டு அன்று
தாக்குதல் நிகழ்த்தப்பட வாய்ப்புள்ளதால் அங்கு சுற்றுலாச்சென்றுள்ள இஸ்ரேல்
மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடற்கரை, கிளப்கள் போன்ற
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்ரேல் மக்கள் கவனத்துடன் இருக்க
வேண்டும். உள்ளூர் ஊடகங்கள், பாதுகாப்பு அமைப்புகள் வெளியிடும் அறிக்கைகளை
இஸ்ரேல் மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு
சுற்றுலாச்சென்றுள்ள தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு இஸ்ரேல் மக்கள் இந்த
பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்” என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் உள்ள
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த கொண்டாட்டங்களில் மேற்கத்திய நாட்டு மக்களும் இஸ்ரேல் இளைஞர்களும்
அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம். இதுபோன்ற வெளிநாட்டு பயணிகள் கூடும்
இடத்தில் பயங்கரவாத அமைப்புகள் குறிவைத்துள்ளதாக இங்குள்ள பாதுகாப்பு
அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில்
இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆனால்,
கோவா மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக எச்சரிக்கை விடுவது இதுதான் முதல்
முறையாகும். இஸ்ரேல் தங்கள் நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
டெல்லியில் உள்ள இஸ்ரேல் துணைதூதரும் இந்த எச்சரிக்கையை உறுதி செய்தார்.
No comments:
Post a Comment