ஏ.டி.எம்.மில் இனி ஒரு நாளைக்கு ரூ.4,500 எடுக்கலாம். இந்த நடைமுறை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலாகிறது.
சிறப்பு அறிவிப்பு
கருப்பு
பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய்
நோட்டுகளை கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக
ஒழித்தார். இதனால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஏ.டி.எம்.
மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும்
அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அது ரூ.2,500 ஆக
உயர்த்தப்பட்டது.இருப்பினும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடியே
கிடக்கின்றன. பணம் இருக்கும் மையங்களில் கூட்டம் அதிகமாக
காணப்பட்டது.இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி
பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு அறிவிப்பு ஏதும் வெளியிடுவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது.
ரூ.4,500 எடுக்கலாம்
இந்தநிலையில்
நாளை (1–ந்தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம்
என்று ரிசர்வ் வங்கி நேற்று இரவு திடீரென அறிவித்தது. ரூபாய் நோட்டு
ஒழிப்பால் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு இது சற்று ஆறுதலை தருவதாக
அமைந்துள்ளது.
அதே சமயத்தில், வாரத்துக்கு ரூ.24
ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படவில்லை.
அந்த உச்ச வரம்பு நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும்
ஏ.டி.எம்.மில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும்
அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment