அதிமுக பொதுச்செயலராக இன்று சசிகலா நடராஜன் பதவியேற்கிறார். இதற்காக
அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவையடுத்து முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றார். அதிமுக
பொதுச்செயலர் யார்? என்கிற கேள்வி எழுந்தது.
அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனை பொதுச்செயலராக்க
முயற்சித்தனர். ஆனால் அதிமுக தொண்டர்கள் இதை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.
அப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதனை
சசிகலாவும் ஏற்றுக் கொண்டார்.
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலராக பதவியேற்கிறார். இதற்காக
அதிமுக அலுவலகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் தம்மை
பொதுச்செயலராக்கும் பொதுக்குழு தீர்மானத்தை வைத்து சசிகலா கண்ணீர் மல்க ஆசி
பெற்றார்.
No comments:
Post a Comment