Latest News

  

7 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த பெண்கள் சுகாதார வளாகம் TIYA வின் விடா முயற்சியால் திறப்பில் தீவிரம்

அதிராம்பட்டினம், டிச-25
அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 7 ஆண்டுகளாக பூட்டிகிடந்த பெண்களுக்கான பிரத்தியேகக் கழிவறை  ( சுகாதார வளாகம் ) மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

மறைந்த பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் வஹாப் அவர்களின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு முட்டுக்கட்டைகளால் திறக்கப்படாமல் தள்ளிக்கொண்டே போனது. இடையில் நீர்முழ்கி மோட்டார் திருடு போனது தான் மிச்சம். இந்நிலையில் அதிரை பேரூராட்சி பொதுநிதி திட்டம் 2014-15 ம் ஆண்டில் ரூ.2.90 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆண்டோர் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாழடைந்த இந்த கழிவறையை மீண்டும் புனரமைத்து திறக்க வேண்டும் என்று CM செல், மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதார இணை இயக்குனர், துணை இயக்குனர், அதிரை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என்று நெடிய கடிதப் போராட்டம் நடத்தி வந்த TIYA வின் முயற்சியால் தற்போது நமது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்திரவின் பேரில் பெண்கள் கழிவறை செப்பனிடப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்படவுள்ளது.

அப்படியே TIYA நிர்வாகமும், பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளை மீண்டும் சுத்தப்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் பூங்காவை சுற்றி வேலி ஓரங்களில் 'போத்தை வெட்டி நட்டாலே துளிர்க்கும் தன்மையுடைய' நம் மண்ணின் மரங்களான முருங்கை, முள்ளு முருங்கை, பூவரசு, கிளுவை போன்றவற்றையும் உட்புறப் பகுதிகளில் மலர்ச்செடிகளையும் வளர்த்து இப்பகுதியினர் ஒத்துழைப்புடன் பராமரிக்க முன்வர வேண்டும்.

முயற்சிகள் மேற்கொண்ட மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கத்திற்கும் (TIYA), தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் ஓத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

நன்றி : அதிரைநியூஸ்

J. ஆசிக் அஹமது
(மாணவ செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.