கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமானநிலையத்துக்கு
நேற்று மும்பையில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின்
உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியிடம்
செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் ‘சாட்டிலைட் போன்’ இருப்பதை அதிகாரிகள்
கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பயணியிடம்
நடத்திய விசாரணையில் அவரது பெயர் அண்ட்ரூ (வயது 31) என்பதும், அவர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகள் அண்ட்ரூவை போலீசாரிடம்
ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து, அவர்
மீது வழக்கு பதிவு செய்து உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை
விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment