மேட்டூர் அருகே மூட்டை கட்டி ரசாயணம் ஊற்றி அழிக்கப்பட்ட 500 ரூபாய்
நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அருகே காவிரி கரையோரத்தில் மூட்டையுடன் 500 ரூபாய் நோட்டுகள்
கறுப்பு நிறத்தில் கிடந்தன. அந்த நோட்டுகளை யாரும் பயன்படுத்தாமல் இருக்க
ரசாயணம் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது.
ரசாயணம் பட்டு கருகிய நோட்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி
மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்து நோட்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
மோடி அறிவித்தார். இந்நிலையில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்த யாரோ தான்
நோட்டுகள் மீது ரசாயணம் ஊற்றி அழித்திருக்க வேண்டும் என்று போலீசார்
சந்தேகிக்கின்றனர்.
காவிரிக் கரையோரம் கிடந்தது கறுப்பு பணமா, கள்ள நோட்டா அவற்றை அங்கு
போட்டது யார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment