மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு மலேசிய குடியுரிமை வழங்கி உள்ளது என்று
மீடியாவில் செய்திகள் வெளியானதை அந்நாட்டு அரசு நிராகரித்து உள்ளது
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்)
கல்வி அறக்கட்டளை, 'பீஸ் டிவி' ஆகிய வற்றை நிறுவியுள்ளார். இவர் தீவிர
வாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்கிறார் என குற்றச்சாட்டு
எழுந்தது. மேலும் பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும்
தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக
ஜாகீர் நாயக் மீது சரமாரியாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்தநிலையில் இந்திய மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு குடியுரிமை
வழங்கிஉள்ள என்று மீடியா செய்திகள் வெளியானதை மலேசிய அரசு நிராகரித்து
உள்ளது, இதுகுறித்து மலேசியா துணை உள்துறை அமைச்சர் டக்தோ நூர் ஜாஸ்லான்
முகமது கூறுகையில், "மலேசிய தம்பதியினருக்கு பிறந்தவர்கள் தவிர்த்து வேறு
யாருக்கும் தானாகவே நாங்கள் யாருக்கும் குடியுரிமை வழங்குவது கிடையாது,"
என்றார்.
தேசிய புலனாய்வு பிரிவு இந்தியாவில் விசாரித்து வரும் நிலையில் மலேசிய அரசு
ஜாகீர் நாயக்கிற்கு குடியுரிமை வழங்கியதாக செய்திகள் வழங்கியது என்று
செய்திகள் வெளியாகியது. "குடியுரிமை வழங்குவதில் பல்வேறு நடமுறைகள்
பின்பற்றப்படுகிறது, மலேசியா குடியுரிமை வழங்குவதற்கு பல தசாப்தங்களாகும்.
இருப்பினும் மலேசியவாழ் இந்தியர்களுக்கன தொண்டு நிறுவனம், இந்து உரிமைகள்
நடவடிக்கை படை; உள்துறை மந்திரி ஜாகித் காமிதி ஜாகீர் நாயக்கிற்கு
குடியுரிமை வழங்க மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment