Latest News

கள்ள நோட்டு கும்பலையே கன்ப்யூஸ் பண்ணிடுச்சே ஆர்.பி.ஐ! கள்ள நோட்டை நிறுத்த இதுதான் ஐடியாவா?

 
புதிதாக வெளியாகியுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பேட்டியளித்துள்ளார். நாடு முழுக்க ஆங்காங்கு கள்ள நோட்டுகள் பிடிபடுவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் உள்ளது, சிப் உள்ளது என்றெல்லாம் வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியபோது, உள்ளே ஒரு 'குர்குரே' சிப்ஸ் கூட கிடையாது என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்த ஆர்.பி.ஐ அதன்பிறகு இப்போதுதான் வாய் திறந்துள்ளது.

9 வித்தியாசங்கள் ஆர்.பி.ஐ அச்சடித்துள்ள 500 ரூபாய் நோட்டிலேயே 9 வித்தியாசங்கள் தென்படும் நிலையில், இதில் கள்ள நோட்டு எப்படி அடிக்க முடியும் என்ற கேலி நோக்கில் உர்ஜித் பட்டேல் கூறியிருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள். ஆம்.. நல்ல நோட்டே கள்ள நோட்டு மாதிரிதான் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மக்கள் மட்டுமல்ல கள்ள நோட்டு கும்பலும், இதில் எதை பிரிண்ட் செய்வது என்று கன்ப்யூஸ் ஆகிப்போய்தான் உள்ளது.

யாருக்கும் தெரியவில்லை மக்களை பொறுத்தளவில், முன்பின் அறிமுகம் இல்லாத 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களில் மக்கள் எப்படி நல்ல நோட்டா கள்ள நோட்டா என சோதித்து பார்க்க முடியும். அவர்களுக்கு எல்லா நோட்டும் ஒன்றுதான்.

கலர் ஜெராக்சே அடிச்சிட்டாங்க கள்ள நோட்டு அடிக்க முடியாது என உர்ஜித் பட்டேல் உணர்ச்சிகரமாக சொல்லும் முன்பே, சாதாரண ஜெராக்ஸ் மெஷினில் 2000 ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்த சம்பவத்தை நாடு பார்த்துவிட்டது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே கலர் ஜெராக்ஸ் தாளை கொடுத்து வெங்காயம் வாங்கி சென்ற மர்ம நபரை போலீஸ் இன்னும் வலை வீசி தேடிக்கொண்டுதான் உள்ளது.

ஹைதராபாத்திலும் சம்பவம் இந்த நிலையில்தான் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், இப்ராகிம்பட்டணம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது. அந்த கும்பலிடம் போலீசார் விசாரித்ததில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் கடுமையான சில்லரை மற்றும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதை பயன்படுத்திக்கொண்டு முதலில் சிறிய தொகைக்கான ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து மார்க்கெட்டுகளில் புழக்கத்தில் விட்டதும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியானதும் அந்த கும்பல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டுகளை அச்சடித்ததும் தெரியவந்தது.

கலர் ஜெராக்ஸ் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 310 மதிப்புள்ள 2 ஆயிரம், 100, 50, 20, 10 ரூபாய் கள்ள நோட்டுகள், 2 கலர் ஜெராக்ஸ் இயந்திரங்கள், ரொக்கம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரிண்ட் செய்தால் குழப்பம் வருவதால்தான், அவர்கள் ஜெராக்ஸ் எடுத்துவிட்டார்கள் போலும். இதையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது ஆபீசர்?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.