தேசிய நதி இணைப்புத் திட்டம் காலங்காலமாக பேசப்பட்டு வருகிற ஒன்று. சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவின் நதிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலாக நதிகளை இணைத்து அந்த திட்டத்தின் மூலம் நதி வழி போக்குவரத்தை உருவாக்க திட்டம் தீட்டியவர் தாமஸ் ஆர்தர் காட்டன். அவர் இந்தியாவில் பல்வேறு பாசன கால்வாய்கள், புதிய அணைகள், ஏரி, குளம், கன்மாய் போன்ற நீர் மேலாண்மையில் பல சிறப்பான முன்னேற்பாடுகளைக் கையாண்டவர்.
ஆனால் நதி வழி போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து மிக மிக எளிது என்று மாற்றுத் திட்டம் செயல்படத் தொடங்கியதும் இவரின் நதி இணைப்பு போக்குவரத்து உண்டாக்கும் கனவு, தொடக்க நிலையிலேயே வற்றிவிட்டது.
இன்றும் நதிகள் இணைப்புக்காக பட்ஜெட்டில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நதிகள் இணைப்பு சாத்தியமா என்ற கேள்வியைவிட, அது தேவைதானா என்ற கேள்வியே முதலில் தேவை.

காரணம், ஒவ்வொரு நதிக்கும் அதற்கெனத் தனித்துவமான சூழலியல் உண்டு. உதாரணத்துக்கு, பிரம்மபுத்திரா நதி இமாலயப் பனி ஓடைகள் மூலம் உருவாகிறது. இதை வேறு நதியுடன் இணைக்கும்போது, இரண்டின் சூழலியலும் பாதிக்கப்படும். அது அப்பகுதி வாழ் மக்களுக்கு ஆபத்தாக முடியும்.
இன்று ஒவ்வொரு மாநில அரசியல்வாதிகளும் நதிகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் பல மாநிலங்களைத் தாண்டி தமிழகத்திற்கு வரும் காவிரியோடு கங்கையை இணைக்கும் திட்டம் தேவையற்ற ஒன்று. நதிகள் இணைப்பு என்பது அரசியல், பொருளாதார, சமூக நல, நீரியல், சூழலியல், உயிரியல் என்ற எந்த பார்வையிலும் தேவையற்ற ஒரு திட்டமே.
நன்றி ; சமூகநீதி முரசு
No comments:
Post a Comment