பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை
தடை செய்துவிட்டு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது
மத்திய அரசு. இந்த விவகாரத்திஒல் பல்வேறு சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும்
வேளையில் இதிலும் சிலர் கள்ள நோட்டுகளை அச்சடிக்க ஆரம்பித்துள்ளனர்.
கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும்
தடுக்கவே இந்த நடவடிக்கை என கூறியது அரசு. ஆனால் இதனை கலர் ஜெராக்ஸ்
எடுத்து ஏமாற்றி கடைகளில் மாற்றி சில்லரை வாங்கி சென்ற சம்பவங்களும்
நடந்தன.
இந்நிலையில் ஹைதராபாத் அருகே புதிய 2000
ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக 6 பேர் கொண்ட கும்பலை கைது
செய்துள்ளனர் போலீசார். ஹைதராபாத் இப்ராஹிம்பட்டிணம் அருகே சிலர் ஒரு
வீட்டில் கள்ள நோட்டு அடிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த
காவல்துறையினர் அங்கு ஆய்வு செய்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய 2000
ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய
ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் செய்யப்பட்டு அங்கிருந்த 6 பேரையும் கைது
செய்தனர் காவல்துறையினர். மேலும் தப்பி சென்ற 2 பேரை தீவிரமாக தேடி
வருகின்றனர்.
No comments:
Post a Comment