அடுத்த தலைவராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒளிவு மறைவின்றி
வெளிப்படையாக அரியணை ஏறுவார் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர்
துரைமுருகன் கூறியுள்ளார்.
நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்
இன்று மாலை நடைபெற்றது. திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இந்த
விழாவுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின்
தலைமை தாங்கினார்.
விழாவில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசுகையில், திமுகவின்
அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலின் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அரியணை
ஏறுவார் எனக் கூறினார்.
பழ.கருப்பையா பேசுகையில், திமுகவை ஸ்டாலின் காப்பாற்றுவார் எனவும்
தமிழில் தேசிய கீதத்தை கொண்டு வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி எனவும்
குறிப்பிட்டார். இந்த விழாவில் சுப.வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment